Wednesday, August 3, 2011

அரபு நாடுகள் மவுனம்

டுனீஷியா, எகிப்தை அடுத்து, சிரியாவில் கடந்த மார்ச் 15ம் தேதி முதல், அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக, மக்கள் போராட்டங்கள் துவங்கின. இப்போராட்டங்களில் இதுவரை, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்; 3,000 பேர் காணாமல் போய்விட்டனர். 12 ஆயிரம் பேர் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த வார இறுதி முதல் மீண்டும், அந்நாட்டின் பல நகரங்களில் அதிபருக்கு எதிராக, மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் துவங்கினர். இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் துவக்க நாளான நேற்று முன்தினம், ஹமா நகரில் தொழுகை முடித்த பின், மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை ஒடுக்குவதற்காக, அங்கு ராணுவ பீரங்கிகள் குவிக்கப்பட்டன. கண்மூடித் தனமாக மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த இரு நாட்களில் மட்டும், 140 பேர் பலியாகியுள்ளனர். நேற்று ஹமா நகரின் மையத்தை நோக்கி பீரங்கிகள் நகரத் துவங்கியதால், நகரில் இருந்து மக்கள், கும்பல் கும்பலாக வெளியேறி, பக்கத்து கிராமங்களில் அடைக்கலம் புகுந்தனர்.

அரபு நாடுகள் மவுனம்: இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் துவக்கத்தில் கூட, சிரிய அதிபர் தன் மக்களை கொன்று குவிப்பதைக் கண்டும், அரபு நாடுகள் மவுனம் சாதித்து வருகின்றன. இது, அப்பகுதி மக்களிடையே சீற்றத்தைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து எகிப்து எதிர்க்கட்சித் தலைவர் முகமது எல்பரேடி "ட்விட்டரில்' அனுப்பிய செய்தி ஒன்றில்,"சிரியாவில் நடக்கும் மனிதப் படுகொலையை உலகம் வேடிக்கை பார்க்கிறது. இது ஒவ்வொரு அராபியனுக்கும், மனிதனுக்கும் வெட்கக் கேடு' என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment